சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2024 வெளியீடு
University of Madras Result April 2024 All Semester
University of Madras Result April 2024 All Semester சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு பருவ தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகமானது வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவானது கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளங்கலை பட்டப்படிப்பு ஒன்றாவது செமஸ்டர் முதல் ஐந்தாவது செமஸ்டர் வரை இளங்கலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகளும், முதுகலை படிப்பு மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளும் சற்றுமுன் வெளியாகி உள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மறு மதிப்பீட்டுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி
தற்போது சென்னை பல்கலைக்கழக பருவ தேர்வு முடிவுகள் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை சென்னை பல்கலைக்கழகம் ஆனது அறிவித்துள்ளது அதன்படி தற்போது மறு மதிப்பிற்கு விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள் ஆகஸ்டு ஆறாம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகமானது தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு அதாவது ஆறாவது செமஸ்டர் தேர்வு எழுதிய இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு முடிவு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது ஒன்று முதல் ஐந்தாவது செமஸ்டர் வரை உள்ள இளங்கலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகளும் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் மற்றும் தொழிற்கல்வி படிப்புக்கான தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகமானது வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
University of Madras Result April 2024 All Semester தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் கீழ்கண்ட இணையதள முகவரியில் சென்று தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
https://egovernance.unom.ac.in/results/
தேர்வு முடிவை எவ்வாறு காண்பது?
1. சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவு இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. மாணவரின் பதிவு எண் அதாவது ரிஜிஸ்டர் நம்பர் பதிவிட வேண்டும்.
3. மாணவரின் பிறந்த தேதியை பதிவிட வேண்டும் dd/mm/yyyy இவ்வாறு பதிவு பதிவு செய்ய வேண்டும்.
4.Get Result கேட் ரிசல்ட் என்று கிளிக் செய்ய வேண்டும்.
5.தற்போது மாணவருடைய தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
மாணவர்கள் இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து பெற நம்முடைய வாட்ஸப் குழுவில் இணையவும்.
