நாளை(6/8/2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!- மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்!..
Tomorrow Local Holiday Chengalpattu Aug 6
Tomorrow Local Holiday Chengalpattu Aug 6 ஆடிப்பூரம் திருவிழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறுவதை ஒட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

தமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகின்ற ஸ்தலமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. இலட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மருவத்தூருக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது இப்போது அமைந்துள்ள பகுதியில் 1960களில் வேப்பமரம் மட்டும் இருந்துள்ளது.
இந்த வேப்ப மரத்தின் இயல்பான சுவையானது கசப்புக்கு பதில் இனிப்பு சுவையில் அதன் பழங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. புயல் காற்றால் மரம் வேரோடு விழுந்த பின்னர் அந்த இடத்தில் கல் ஒன்று முளைத்ததாகவும், அந்த இடத்தில் சித்தர் பீடம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பங்காரு அடிகளார் இங்கு ஆதிபராசக்தியின் பெயரால் அருள் வாக்கு கூறி வந்தார். இந்து கோவில் என்றாலும் அனைத்து மதத்தவர்களும் கருவறை வரை வந்து பூஜை செய்யலாம் என்பது இந்த சித்தர் பீடத்தின் கூடுதல் சிறப்பு.
பங்காரு அடிகளாரை அம்மா என்றே பக்தர்கள் அழைத்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் பங்காரு அடிகளார் உயிரிழந்த நிலையில், அவரது உடல் சித்தர் பீடத்தின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆடிப்பூரம் திருவிழா என்பது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் படத்தில் மிகவும் விசேஷமானதும் அந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாளை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது,