Today Gold And Silver Price Chennai July 19
2-வது நாளாக தங்கத்தின் விலை மீண்டும் சரிவு!- பொதுமக்கள் ஆனந்தம்!!
Today Gold And Silver Price Chennai July 19 கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை ஆனது வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகின்ற நிலையில், இன்று தற்போது அதிரடியாக தங்கத்தின் விலை ஆனது குறைந்துள்ளது .எனவே நகைப் பிரியர்களும் இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்தியாவைப் பொருத்தமட்டில் தங்கம் விலை ஆனது ஒரு நாள் உயர்கிறது மறுநாள் கொஞ்சம் குறைவது போல ஆட்டம் காட்டி செல்கிறது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நிலவி இருந்த போர் காரணமாக தங்கத்தின் விலை ஆனது உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்தது. தங்கத்தின் விலை ஆனது கடந்த மார்ச் மாதம் தொடங்கத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
எனவே இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஆனது தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து இருந்தது. அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆனது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 அதிகரித்து காணப்பட்டது. இதே போன்று புதன்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 720 அதிரடியாக அதிகரித்தது. இருந்தாலும் நேற்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்தது.
நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 55,240க்கும் கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6095 இருக்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை
இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் தங்கத்தின் விலை ஆனது வரலாறு காணாத உச்சத்தை அடைந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்து இருப்பது நகை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,875-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,500-க்கும், ஒரு சவரன் ரூ. 60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1. 45 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 97.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 97.750-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.