12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
TN 12th Original Mark Sheet Issue Date 2024
TN 12th Original Mark Sheet Issue Date 2024 : தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 2024 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணி ஆனது நிறைவடைந்து, எனவும் மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12th Original Mark sheet 2024
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
2024 மார்ச் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவருக்கு தேர்வு முடிவுகள் ஆனது பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டது. அதன் பின் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆனது வழங்கப்பட்டது.
அந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் 11ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண்கள் ஒரே சான்றிதழில் கொடுக்கப்பட்டது இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கொண்டு மாணவர்கள் தற்போது உயர்கல்வி படிக்கும் கல்வி நிறுவனங்களில் இந்த மதிப்பெண் சான்றிதழை கொண்டு சேர்க்கையானது நடைபெற்று கொண்டிருக்கின்றது.
அசல் மதிப்பெண் சான்றிதழ்
இந்த வேலையில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்யும் பணி ஆனது நிறைவடைந்து தற்போது அசல் மதிப்பெண் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12 ஆம் வகுப்பு தனி தேர்வுகள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
