Pudhucherry 12 Saturdays Working Days For Schools
இனி சனிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிகள் செயல்படும்!- பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Pudhucherry 12 Saturdays Working Days For Schools புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை ஆனது தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே 2024-25 ஆம் ஆண்டு கல்வி வகுப்புகள் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாகவும் முகரம் பண்டிகையை முன்னிட்டு புதுவை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 17 /4 /2024 முதல் 17 /7/2024 வரை 12 வேலை நாட்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனவே அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வண்ணமாக புதுவை மாநிலம் முழுவதும் 12 சனிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிக்கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுவை பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பள்ளிக்கூடம் நடைபெற உள்ள நாட்களில் அன்று என்ன கிழமை காண பாட வேலை பின்பற்ற வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20.7.2024 (புதன்கிழமை),
3.8.2024 (வியாழக்கிழமை),
10.8.2024 (திங்கட்கிழமை),
24.8.2024 (செவ்வாய்க் கிழமை),
31.8.2024 (திங்கட் கிழமை),
21.9.2024 (செவ்வாய்க்கிழமை),
28.9.2024 (புதன்கிழமை),
5.10.2024 (வியாழக்கிழமை),
19.10.2024 (வெள்ளிக்கிழமை),
26.10.2024 (திங்கட்கிழமை),
9.11.2024 (செவ்வாய்க்கிழமை),
23.11.2024 (புதன்கிழமை) பாடவேளை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும், கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.