தீபாவளிக்கு மறுநாள் நாடு முழுவதும் பொது விடுமுறை முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!.. Happy November 1 Leave Announcement 2024

Happy November 1 Leave Announcement 2024

தீபாவளிக்கு மறுநாள் நாடு முழுவதும் பொது விடுமுறை முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!..

Happy November 1 Leave Announcement 2024  நாடு முழுவதும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடுவர். இதையொட்டி தீபாவளி நாளான்று அரசு விடுமுறை நாளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy November 1 Leave Announcement 2024
Happy November 1 Leave Announcement 2024

இந்த சிறப்பு பண்டிகை அன்று மக்கள் பெரியளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஒரு நாள் மட்டும் விடுமுறை என்பதால், அடுத்த நாள் உடனடியாக ஊர் திரும்பும்போது மக்கள் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுவர். இதனால் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உட்பட பல்வேறு பிரிவினர் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

இந்நிலையில் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01:11:2024 அன்று விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாகவும் அறிவிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் தொடர் விடுமுறை

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. அன்று  ஏற்கெனவே அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதேபோல நவம்பர் 2 (சனிக்கிழமை), 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறையாக இருந்த நிலையில், நவ.1-ம் தேதியும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால், மொத்தம் 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

Happy November 1 Leave Announcement 2024
Happy November 1 Leave Announcement 2024

Leave a Comment