சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் எவ்வளவு தெரியுமா?..
Gas Cylinder Price today August 1 2024
Gas Cylinder Price today August 1 2024 : ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சென்னை நிறுவனங்கள் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் புதிய விலை பட்டியல் ஆனது வெளியாகி உள்ளது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை
சமையல் எரிவாயு விலையானது எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்த கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றனர் அந்த வகையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவித்துள்ளது அதன்படி வெளியான அறிவிப்பு
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சற்று உயர்ந்துள்ளது.
இன்று முதல் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது ரூபாய் 1809.50 பைசாவாக 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக்கூடிய வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலகில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது அதன்படி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ₹818.50 என்ற அளவிலேயே தொடர்வதாக என்னை நிறுவனங்கள் அறிவித்துள்ளது இந்த செய்தி பொது மக்களுக்கு மிகவும் நிம்மதி அளிக்கக்கூடிய செய்தியாக அமையும்.
மேலும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கக்கூடிய மானியமானது ஏற்கனவே பெறப்பட்ட அதே அளவில் கிடைக்கும் உஜ்வாலா சிலிண்டர் பயன்பாட்டாளர்களுக்கும் ஏற்கனவே பெற்று வருகின்ற அந்த மானியம் ஆனது தொடர்ந்து கிடைக்கும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை.