ஒரு கோடி வீடுகளுக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை மின்சார வாரியம் மகிழ்ச்சி அறிவிப்பு!! Electricity Tariff Hike New Update July 16

ஒரு கோடி வீடுகளுக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை.. மின்சார வாரியம் மகிழ்ச்சி அறிவிப்பு!!

Electricity Tariff Hike New Update July 16

 Electricity Tariff Hike New Update July 16 தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது நேற்றைய தினம் மின்கட்டணம் உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது .அதனைக் குறித்து விரிவான தகவலை கீழ்க்கண்டவற்றில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

Electricity Tariff Hike New Update July 16
Electricity Tariff Hike New Update July 16

1 கோடி நுகர்வோருக்கு எந்தவித மாற்றமும் இல்லை:

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

5 ரூபாய் மட்டுமே அதிகம்:

Electricity Tariff Hike New Update July 16
Electricity Tariff Hike New Update July 16

மேலும், 63 லட்சம் பேருக்கு மாதம் ரூ. 5 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும். 35 லட்சம் நுகர்வோருக்கு மாதம் ரூ. 15 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும். 25 லட்சம் நுகர்வோருக்கு மாதம் ரூபாய் 25 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும். 13 லட்சம் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ. 40 மட்டுமே மின் கட்டணம் அதிகரிக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், 2024-25 ஆண்டுக்கான மின் கட்டணத்தை பணவீக்க விகித அடிப்படையில் மாற்றியமைத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்புகளுக்கு 1 முதல் 400 யூனிட் வரை, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆகவும், 401-500 யூனிட் வரை ரூ.6.15-ல் இருந்து ரூ.6.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 501-600 யூனிட் வரை ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆகவும், 601-800 யூனிட் வரை ரூ.9.20-ல் இருந்து ரூ.9.65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 801-1000 யூனிட் வரை ரூ.10.20-ல் இருந்து ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுக்கு மேல் ரூ.11.25-ல் இருந்து ரூ.11.80 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு வசதிகள், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தெருவிளக்கு, குடிநீர் விநியோகத்துக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது.

நிலைக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.102-ல்இருந்து ரூ.107 ஆக உயர்ந்துள்ளது. கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

Leave a Comment